நட்சத்திரம்-நட்சத்திர பாதங்கள்-அதன் ராசிகள்
புவியின் 360° சுற்றுவட்டப்பாதை 108 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் 30 பாகைகள் கொண்டது. காலசக்கர விதியின்படி மேஷம் முதல் 30 பாகை என்று எண்ணிக்கொண்டு வார மீனம் முடியும்போது 360 பாகைகளில் முடியும் . ஒவ்வொரு மாதமும் 9 பாதங்கள் அடங்கியவை. ஒரு நட்சத்திரம் நான்கு நட்சத்திர பாதங்கள் கொண்டவை. அவை முதலாம் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம், நான்காம் பாதம் என பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பாதமும் 3 பாகை, 20 பாகைத்துளிகள். இதன் மூலம் இராசிச் சக்கரம் 27 X 4 = 108 பாதங்களாக வகுக்கப்படுகின்றன. இராசிச் சக்கரத்திலுள்ள 12 இராசிகள் ஒவ்வொன்றும் 9 பாதங்களை அல்லது 2-1/4 நட்சத்திரங்களைக்கொண்ட 30 பாகைகளை ஒரு ராசி கொண்டுள்ளது.
தமிழ் மாதம் | நட்சத்திரம் | நட்சத்திர பாதம் | ராசி |
சித்திரை | அஸ்வினி | 1+2+3+4 பாதங்கள் | மேஷம் |
சித்திரை | பரணி | 1+2+3+4 பாதங்கள் | மேஷம் |
சித்திரை வைகாசி | கார்த்திகை | 1 ஆம் பாதம் 2+3+4 பாதங்கள் | மேஷம் ரிஷபம் |
வைகாசி | ரோகிணி | 1+2+3+4 பாதங்கள் | ரிஷபம் |
வைகாசி ஆனி | மிருகசீரிஷம் | 1+2 பாதங்கள் 3+4 பாதங்கள் | ரிஷபம் மிதுனம் |
ஆனி | திருவாதிரை | 1+2+3+4 பாதங்கள் | மிதுனம் |
ஆனி ஆடி | புனர்பூசம் | 1+2+3 பாதங்கள் 4 ஆம் பாதம் | மிதுனம் கடகம் |
ஆடி | பூசம் | 1+2+3+4 பாதங்கள் | கடகம் |
ஆடி | ஆயில்யம் | 1+2+3+4 பாதங்கள் | கடகம் |
ஆவணி | மகம் | 1+2+3+4 பாதங்கள் | சிம்மம் |
ஆவணி | பூரம் | 1+2+3+4 பாதங்கள் | சிம்மம் |
ஆவணி புரட்டாசி | உத்திரம் | 1ஆம் பாதம் 2+3+4 பாதங்கள் | சிம்மம் கன்னி |
புரட்டாசி | ஹஸ்தம் | 1+2+3+4 பாதங்கள் | கன்னி |
புரட்டாசி ஐப்பசி | சித்திரை | 1+2 பாதங்கள் 3+4 பாதங்கள் | கன்னி துலாம் |
ஐப்பசி | சுவாதி | 1+2+3+4 பாதங்கள் | துலாம் |
ஐப்பசி கார்த்திகை | விசாகம் | 1+2+3 பாதங்கள் 4 ஆம் பாதம் | துலாம் விருச்சிகம் |
கார்த்திகை | அனுசம் | 1+2+3+4 பாதங்கள் | விருச்சிகம் |
கார்த்திகை | கேட்டை | 1+2+3+4 பாதங்கள் | விருச்சிகம் |
மார்கழி | மூலம் | 1+2+3+4 பாதங்கள் | தனுசு |
மார்கழி | பூராடம் | 1+2+3+4 பாதங்கள் | தனுசு |
மார்கழி தை | உத்ராடம் | 1 ஆம் பாதம் 2+3+4 பாதங்கள் | தனுசு மகரம் |
தை | திருவோணம் | 1+2+3+4 பாதங்கள் | மகரம் |
தை மாசி | அவிட்டம் | 1+2 பாதங்கள் 3+4 பாதங்கள் | மகரம் கும்பம் |
மாசி | சதயம் | 1+2+3+4 பாதங்கள் | கும்பம் |
மாசி பங்குனி | பூரட்டாதி | 1+2+3 பாதங்கள் 4 ஆம் பாதம் | கும்பம் மீனம் |
பங்குனி | உத்திரட்டாதி | 1+2+3+4 பாதங்கள் | மீனம் |
பங்குனி | ரேவதி | 1+2+3+4 பாதங்கள் | மீனம் |