கோசார பலன்கள்
கீழே உள்ள கிரகங்களை கிளிக் செய்து கோசார பலன்களை தெரிந்து கொள்ளலாம்சூரியன் | சந்திரன் | செவ்வாய் |
புதன் | குரு | சுக்கிரன் |
சனி | ராகு | கேது |
கேது கோசார பலன்கள்
கேது ஒரு ராசியில் 1½ வருட காலம் சஞ்சரிப்பார். கேது ஒரு ராசியின் பிற்பகுதியில் சஞ்சாரம் செய்யும் பொழுது தாம் கொடுக்க வேண்டிய சுப பலன்களை கொடுப்பார்.
கோசார கேது ஜெனன ராசியில் இருந்து ஒவ்வொரு ராசியாக சஞ்சரிக்கும் பொது ஏற்படும் சுப அசுப பலன்கள் கீழே உள்ளது.
குறிப்பு : கோசார பொது பலன்கள் 40% தாக்கத்தை மட்டுமே ஒரு ஜாதகருக்கு உண்டுபண்ணும். ஜெனன ஜாதகம் மற்றும் நடப்பு தசா புக்திகள் 60% தாக்கத்தை உண்டு பண்ணும்
சுப பலன் – [ராசி] முதல் கேது 3, 6, 11 வீடுகளில் பயணிக்கும் போது சுப பலன்
அசுப பலன் – [ராசி] முதல் கேது 1, 2, 4, 5, 7, 8, 9, 10, 12 வீடுகளில் பயணிக்கும் போது அசுப பலன்
முதலாம் வீட்டில் (ராசி):
முயற்சி தடை, வீண் பகை, நோய், கவலை, மருத்துவ செலவு, குடும்ப பிரச்சனை, மனக்குழப்பம், தொழில் நசிவு போன்றவை ஏற்படும்.
இரண்டாம் வீட்டில்:
கவலை, கஷ்டம், கெட்ட செலவு, மகிழ்ச்சி குறைவு, குடும்பத்தில் நோய், பண தட்டுப்பாடு, உறவால் பிரச்சனை, நண்பரால் ஆதரவு, வேலை மாற்றம், வேலை முன்னேற்றம்.
மூன்றாம் வீட்டில்:
காரிய வெற்றி, மன அமைதி, ஆரோக்யம், தொழில் முன்னேற்றம், அதிக செலவு, நோய் நீங்குதல் போன்றவை ஏற்படும்.
நான்காம் வீட்டில்:
சுக கேடு, தாயார் உடல்நிலை பாதிப்பு, கடன் தொல்லை, குடும்ப ஒற்றுமை, வாகன பிரெச்சனை, பணப்புழக்கம் போன்றவை ஏற்படும்.
ஐந்தாம் வீட்டில்:
புதிய நட்பு, நட்பால் ஆதாயம், வழக்கு, பண வரவு, பகை, நோய், துயரம் போன்றவை உண்டாகும்.
ஆறாம் வீட்டில்:
துணிவு, காரிய வெற்றி, நண்பர்களால் ஆதரவு, விரோதம் அழியும், பொருள் வசதி, ஆரோக்யம், ஆனந்தம் ஆகியவை ஏற்படும்.
ஏழாம் வீட்டில்:
வாழ்க்கை துணையால் பிரச்சனை, வறுமை, நோய், தொழில் சரிவு, புதிய நட்பால் சிக்கல், நெருங்கிய நட்பால் உதவி, பண செலவு, காரிய தாமதம், குடும்பத்தில் சச்சரவு, போன்றவை ஏற்படும்.
எட்டாம் வீட்டில்:
எதிர்பாலினத்தவரால் பிரெச்சனை, வாழ்க்கை துணையால் பிரெச்சனை, விபத்து, ரெத்த சிந்துதல், மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டிய சூழல் போன்றவை உண்டாகும்.
ஒன்பதாம் வீட்டில்:
தந்தை உடல் நல குறைவு, குடும்ப தொல்லைகள், சுக குறைவு போன்றவை ஏற்படும்.
பத்தாம் வீட்டில்:
புதிய தொழில் முயற்சி, வருமான வரவு, புதிய சொத்து வாங்குதல், போன்றவை ஏற்படும்.
பதினொன்றாம் வீட்டில்:
காரிய வெற்றி, தொழில் முன்னேற்றம், பாராட்டுக்கள், பயண லாபம், புதிய வீடு, நகை போன்றவை உண்டாகும்.
பனிரெண்டாம் வீட்டில்:
உறவினர் தொல்லை, உடல் நல குன்றுதல், வாழ்க்கை துணையோடு பிரெச்சனை, வருவாய் குறைவு, மருத்துவ செலவு, நண்பர்களால் விரையம் போன்றவை ஏற்படும்.
ஜெனன ஜாதகத்தில் கேது சிறப்பான அமைப்பை பெற்று இருந்தால் கொசாரத்தால் ஏற்படும் பெரிய பாதிப்புகள் குறையும். ஆன்மீக நாட்டம் அதிகாரிக்கும்.