கோசார பலன்கள்

கீழே உள்ள கிரகங்களை கிளிக் செய்து கோசார பலன்களை தெரிந்து கொள்ளலாம்
சூரியன்சந்திரன் செவ்வாய்
புதன் குரு சுக்கிரன்
சனி ராகு கேது

குரு கோசார பலன்கள்

குரு ஒரு ராசியில் 1 வருட காலம் சஞ்சரிப்பார்.  ராசியின் முற்பகுதியில் சஞ்சாரம் செய்யும் பொழுது சுப அசுப பலன்களை நடத்தி வைப்பார்.


கோசார குரு ஜெனன ராசியில் இருந்து ஒவ்வொரு ராசியாக சஞ்சரிக்கும் பொது ஏற்படும் சுப அசுப பலன்கள் கீழே உள்ளது.

குறிப்பு : கோசார பொது பலன்கள் 40% தாக்கத்தை மட்டுமே ஒரு ஜாதகருக்கு உண்டுபண்ணும். ஜெனன ஜாதகம் மற்றும் நடப்பு தசா புக்திகள் 60% தாக்கத்தை உண்டு பண்ணும்

சுப பலன் – [ராசி] முதல் குரு  2,5,7,9,11 வீடுகளில் பயணிக்கும் போது சுப பலன்

அசுப பலன் – [ராசி] முதல் குரு 3, 4, 6, 8, 10, 12 வீடுகளில் பயணிக்கும் போது அசுப பலன்

முதலாம் வீட்டில் (ராசி):

வாக்குவாதம், மன குழப்பம், நிம்மதியின்மை, அலைச்சல், அரசு தடை மற்றும் தண்டனை. சண்டை, உணர்வு அதிகமாகி புத்தி வேலைசெய்யாது போதல், இட மாற்றம், பதவி மாற்றம், நோய், கவலை, தூக்கமின்மை போன்றவை உண்டாகும்

இரண்டாம் வீட்டில்:

செல்வம் சேரும், பகைவர் இல்லாத நிலை, குடும்பதில் சுப நிகழ்வு, குழந்தை பிறப்பு, ஆரோக்யம், நல்ல வருமானம், நண்பர்கள் உதவி, பல நன்மைகள் உண்டாகும்.

மூன்றாம் வீட்டில்:

தைரிய குறைவு, நோய், பதவி மாற்றம், இடமாற்றம், துன்பம், பொருள் களவு போதல், எதிரிகளால் தொல்லை, மனக்குழப்பம் போன்றவை ஏற்படும்

நான்காம் வீட்டில்:

சொத்து இழப்பு அல்லது விற்றல், உறவினரால் தீமை, தங்க அணிகலன் குறைதல் அல்லது இழப்பு, சுகமின்மை, தாயாருக்கு சுகவீனம், மனக்குழப்பம் போன்றவை ஏற்படும்.

ஐந்தாம் வீட்டில்:

திருமண வாய்ப்பு, குழந்தை பிறப்பு, வாகன வசதி, புது மனை, ஏவல் ஆட்கள், ஆடை ஆபரணம், கல்வியில் தேர்ச்சி, ஊக்கம், செல்வம் சேர்க்கை, பயணங்களால் ஆதாயம், குடும்பதில் மகிழ்ச்சி, புத்திர லாபம், பெண் சுகம் ஆகியவை உண்டாகும்.

ஆறாம் வீட்டில்:

சுக குறைவு, எதிர்ப்பு, நோய், வீண் தகராறு, தொழில் நஷ்டம், ஆகியவை ஏற்படும். ஒரு சிலருக்கு கடன் பகை நோய் அகலும்.

ஏழாம் வீட்டில்:

சகல இன்பங்கள், செல்வ பெருக்கு, திருமண வாய்ப்பு, குழந்தை பாக்கியம், நல ஆரோக்யம், நண்பரால் உதவி, போன்றவை கிட்டும், மதிப்பு, மரியாதை, செல்வாக்கும் ஏற்படும்.

எட்டாம் வீட்டில்:

துக்கம், மற்றும் மரணத்திற்க்கு ஒப்பான கண்டங்கள், விபத்து, காரிய தடை, வழக்கால் சிக்கல், இடமாற்றம், மன குழப்பம், பண இழப்பு, போன்றவை ஏற்படும்.

ஒன்பதாம் வீட்டில்:

ஆற்றல், அதிகாரம், மகப்பேறு, காரிய வெற்றி, நிலமனை சேர்க்கை, இன்ப உறவுகள், திருமண வாய்ப்பு, எதிர்பாராத அதிர்ஷ்டம், குடும்ப சிக்கல்களுக்கு தீர்வு, தொழில் முன்னேற்றம், தந்தைக்கு விருத்தி, தந்தையால் ஆதாயம், ஆகியன உண்டாகும்.

பத்தாம் வீட்டில்:

அலைச்சல், இடமாற்றம், தாரத்திற்க்கு உடல் நல குறைவு, குடும்ப பிரிவு, வேலை தொழில் இல்லாதவர்களுக்கு உத்யோக வாய்பு, பண கஷ்டம் போன்றவை ஏற்படும்.

பதினொன்றாம் வீட்டில்:

பதவி முன்னேற்றம், இழந்தவை மீண்டும் கிடைப்பது, துணையோடு நல்லுறவு, வெற்றி, வாரிசுகளுக்கு திருமண ஏற்பாடு, பண வரவு, திடீர் அதிர்ஷ்டம், எதிர்பாராத நன்மை, வழக்கில் வெற்றி, சேமிப்பு, நட்பால் மகிழ்ச்சி, வீடு, மனை, வாகனம் உத்யோகம், போன்றவை அமையும்.

பனிரெண்டாம் வீட்டில்:

பொருள் சேதம், விரயம், மரண பயம், துக்கம், நிலை மாற்றம், காலம் தவறிய உணவு, நிம்மதி அற்ற உறக்கம், தாம்பத்திய சுகம் கெடுதல் போன்றவை உண்டாகும்.

 

கோசாரத்தில் குரு தனித்து சஞ்சரிக்கும் பொது மேற்படி பலன்கள் நடைபெறும். உடன் ராகு கேது சனி போன்றவை சேர்ந்து சஞ்சரிக்கும்போது பலன்கள் மாறுபடும்.