கோசார பலன்கள்

கீழே உள்ள கிரகங்களை கிளிக் செய்து கோசார பலன்களை தெரிந்து கொள்ளலாம்
சூரியன்சந்திரன் செவ்வாய்
புதன் குரு சுக்கிரன்
சனி ராகு கேது

ராகு கோசார பலன்கள்

ராகு ஒரு ராசியில்   வருட காலம் சஞ்சரிப்பார். ராகு ஒரு ராசியின் பிற்பகுதியில் சஞ்சாரம் செய்யும் பொழுது தான் தாம் கொடுக்க வேண்டிய பலன்களை கொடுப்பார். ராகு சனி கிரக பலன்களை போல் கொசார பலனளிப்பார் என்று சில நூல்கள் சொல்கின்றது.


கோசார ராகு ஜெனன ராசியில் இருந்து ஒவ்வொரு ராசியாக சஞ்சரிக்கும் பொது ஏற்படும் சுப அசுப பலன்கள் கீழே உள்ளது.

குறிப்பு : கோசார பொது பலன்கள் 40% தாக்கத்தை மட்டுமே ஒரு ஜாதகருக்கு உண்டுபண்ணும். ஜெனன ஜாதகம் மற்றும் நடப்பு தசா புக்திகள் 60% தாக்கத்தை உண்டு பண்ணும்

சுப பலன் – [ராசி] முதல் ராகு 3,6,11 வீடுகளில் பயணிக்கும் போது சுப பலன்

அசுப பலன் – [ராசி] முதல் ராகு 1, 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 12 வீடுகளில் பயணிக்கும் போது அசுப பலன்

முதலாம் வீட்டில் (ராசி):

அலைச்சல், மனக்குழப்பம், நோய், குடும்பதில் குழப்பம், தம்பதியர் இடையே சண்டை, போன்றவை உண்டாகும்.

இரண்டாம் வீட்டில்:

வாக்கு தவறுதல், பண விரையம், குடும்பத்தில் சண்டை, கண் நோய், கருத்து வேறுபாடு, பிறர் தம்மை தவறாக புரிந்துகொண்டு பிரெச்சனை ஏற்படுவது போன்றவை நடக்கும்.

மூன்றாம் வீட்டில்:

காரிய வெற்றி, பகைவரை சமாளிப்பது, உற்றார் உறவினர் நண்பர்களால் உதவி போன்றவை ஏற்படும்.

நான்காம் வீட்டில்:

கல்வி தடை, தாய்க்கு மருத்துவம், அமைதியின்மை, அலைச்சல், வெளியூர் பயணம், குடும்ப பிரச்சனை, நோய் போன்றவை ஏற்படும்.

ஐந்தாம் வீட்டில்:

வாரிசுகளால் பிரெச்சனை, சண்டை, பணவிரையம், திருமண தடை, புத்திர பாக்கிய தடை, பூர்வீக சொத்து தடை, போன்றவை உண்டாகும்.

ஆறாம் வீட்டில்:

பகை வெல்லுதல், பிரிந்தவர் சேர்வது, பகை நட்பாக மாறுவது, மனோ தைரியம், ஆரோக்யம், போன்றவை ஏற்படும்.

ஏழாம் வீட்டில்:

திருமண தடை, தம்பதியருக்குள் சண்டை, பிரிவு, மனக்கஷ்டம், பிடிப்பற்ற வாழ்வு, மகப்பேறு தடை, நண்பர்கள் விரோதியாவது, மஞ்சள் காமாலை நோய், உடல்நல பதிப்பு, மனக்குழப்பம் போன்றவை ஏற்படும்.

எட்டாம் வீட்டில்:

எதிர்பாராத விபத்து, எதிர்கள் தொல்லை, விஷ கடி ஆபத்து, உடல்நிலை கோளாறு, உணவே விஷமாதல், மனக்கவலை, வறுமை, போன்றவை ஏற்படும்.

ஒன்பதாம் வீட்டில்:

தந்தை உடல்நலம் கெடும், தந்தைவழி மற்றும் தந்தையோடு பகை, பிரச்சனை, வழக்கு, அவமானம் போன்றவை ஏற்படும்.

பத்தாம் வீட்டில்:

உழைப்பு, வியாபார தடை, தொழில் சிரமம், உத்தியோகத்தில் நிம்மதியின்மை போன்றவை ஏற்படும்.

பதினொன்றாம் வீட்டில்:

வியாபார முன்னேற்றம், லாபம், மகிழ்ச்சி, பொன் பொருள் சேர்க்கை, வாகன யோகம் போன்றவை ஏற்படும்.

பனிரெண்டாம் வீட்டில்:

பண விரையம், அலைச்சல், மனநல பதிப்பு, தூக்கமின்மை, சுக குறைவு, மனக்குழப்பம் போன்றவை ஏற்படும்.

ராகு நிழல் கிரகமாகும், அதாவது உருவமற்றது. ராகுவும் கேதுவும் பலம் வாய்ந்த கிரகங்களாக கருதப்படுகிறது. ஒரு சிலருக்கு கோசரம் ராகு சுப பலம் பெற்றால் பெரிய பதிப்புகளை உண்டு பன்னாட்டு.