கோசார பலன்கள்

கீழே உள்ள கிரகங்களை கிளிக் செய்து கோசார பலன்களை தெரிந்து கொள்ளலாம்
சூரியன்சந்திரன் செவ்வாய்
புதன் குரு சுக்கிரன்
சனி ராகு கேது

சுக்கிரன் கோசார பலன்கள்

சுக்கிரன் ஒரு ராசியில் 1 மாத காலம் சஞ்சரிப்பார்

சுக்கிரன் ஒரு ராசியில் மத்திய பகுதியில் சஞ்சரிக்கும்போது சுப அசுப பலன்களை கொடுப்பார்.


கோசார சுக்கிரன் ஜெனன ராசியில் இருந்து ஒவ்வொரு ராசியாக சஞ்சரிக்கும் பொது ஏற்படும் சுப அசுப பலன்கள் கீழே உள்ளது.

குறிப்பு : கோசார பொது பலன்கள் 40% தாக்கத்தை மட்டுமே ஒரு ஜாதகருக்கு உண்டுபண்ணும். ஜெனன ஜாதகம் மற்றும் நடப்பு தசா புக்திகள் 60% தாக்கத்தை உண்டு பண்ணும்

சுப பலன் – [ராசி] முதல் சுக்கிரன். 1, 2, 3, 4, 5, 9, 11 வீடுகளில் பயணிக்கும் போது சுப பலன்

அசுப பலன் – [ராசி] முதல் சுக்கிரன் 6,7,8,.10,12 வீடுகளில் பயணிக்கும் போது அசுப பலன்

முதலாம் வீட்டில் (ராசி):

இன்பம், புதிய பதவி, வாகன வசதி, மகப்பேறு, நல்ல கல்வி, கரிய வெற்றி, செல்வ சேர்க்கை, தொழில் முன்னேற்றம், வீடு மனை வாங்குதல், புதிய ஆடைகள் போன்றவை ஏற்படும்.

இரண்டாம் வீட்டில்:

பண வரவு, செல்வந்தர் நட்பு, குடும்ப மகிழ்ச்சி, மகப்பேறு, திருப்தியான இன்பம், ஆரோக்யம், பூர்வீக சொத்து போன்றவை கிடைக்கும்,

மூன்றாம் வீட்டில்:

பதவி, அதிகாரம், கௌரவம், செல்வம், பகை வெற்றி, திருமண வாய்ப்பு, மகப்பேறு, புதிய மனிதர்களால் சிக்கல் மற்றும் பிரச்சனை போன்றவை ஏற்படும்.

நான்காம் வீட்டில்:

பிரிந்தோர் மீண்டும் சேர்தல், வாகன யோகம், குடும்பத்தில் சுப நிகழ்வுகள், புதுமனை குடிபோதல், நட்பால் உதவி, வழக்கு சாதக போக்கு போன்றவை ஏற்படும்.

ஐந்தாம் வீட்டில்:

மகிழ்ச்சி, நட்பால் லாபம், மகப்பேறு, பகைவர் அற்ற நிலை, காரிய வெற்றி, வாரிசுகளால் நன்மை, தெய்வ பக்தி போன்றவை உண்டாகும்.

ஆறாம் வீட்டில்:

அவமானம், நோய், துன்பம், நட்பு பகையாதல், சண்டை, பொருளாதார சிக்கல், கடன் தொல்லை போன்றவை ஏற்படும்.

ஏழாம் வீட்டில்:

மாற்று பாலினதவரால் கெடுதி, களத்திர தோஷம், தம்பதியருக்குள் சண்டை, நட்பு, உற்றார், உறவினர்களோடு சண்டை, பகை போன்றவை ஏற்படும்.

எட்டாம் வீட்டில்:

புது வீடு, வேலையாள், இன்ப உறவு, பணவரவு, எதிர்பாராத காரிய வெற்றி, போன்றவை உண்டாகும்.

ஒன்பதாம் வீட்டில்:

பொருள் வரவு, இன்ப வாழ்வு, தான தர்மம், செல்வ உயர்வு, மன நிம்மதி, காரிய வெற்றி, பெரியோர் ஆசி, மகிழ்ச்சி போன்றவை ஏற்படும்.

பத்தாம் வீட்டில்:

வம்பு சண்டை, அவமானம், பிடிவாத வெற்றி, விரோதிகளால் லாபம், போன்றவை ஏற்படும்.

பதினொன்றாம் வீட்டில்:

நட்பு பெருக்கம், மகிழ்ச்சி, வருவாய் உயர்வு, உடன்பிறந்தோர் உதவி, புதிய தொழில் லாபம், மூத்த உடன்பிறப்பு வீட்டில் சுப நிகழ்வு போன்றவை உண்டாகும்.

பனிரெண்டாம் வீட்டில்:

எதிர் பாலினதவரால் நஷ்டம், சண்டை, கேட்ட பெயர் போன்றவையும், திருமண வாய்ப்பு, தனது பொருட்கள் உடமைகள் தொலைவது அல்லது கெட்டுபோவது போன்றவை நடக்கும்.

ஜனன ஜாதகத்தில் சுக்கிரன் சுப பலம் பெற்று இருந்தால் ஆட்சி உட்சம் பெற்று இருந்தாலும். தீய கிரக சேர்க்கை பார்வை போன்றவை இல்லாமல் இருந்தால் கெடுபலன்கள் குறைய வாய்ப்பு உண்டு.