சுபர், பாபர், லக்ன சுபர், லக்ன பாபர், ஆதிபத்ய சுபர், ஆதிபத்ய பாபர்,
சுபர், பாபர், லக்ன சுபர், லக்ன பாவர், ஆதிபத்ய சுபர், ஆதிபத்ய பாவர், சமம் போன்ற கிரக தன்மைகள். லக்ன சுப பாபர்களை ஆதிபத்ய சுபர் பாபர் என்றும் சொல்லப்படுகிறது
- இயற்கை சுபர்
- இயற்கை பாப கிரகம் [ தீய கோள்]
- லக்ன / ஆதிபத்திய சுபர்
- லக்ன / ஆதிபத்திய பாப கிரகம் [ தீய கோள்]
- சம பலம் கொண்ட கிரகங்கள்
- லக்ன வாரியாக சுபர் பாபர்
இயற்கை சுப கிரகம்
- குரு
- சுக்கிரன்
- வளர்பிறை சந்திரன்
- சுப நிலை புதன
மேற்கூறிய கிரகங்கள் நற்பலன்களை செய்ய கடமை பட்டவர்கள். சில நிலைகளில் மட்டும் நல்ல பலன்களை செய்ய இயலாமல் போகும்
இயற்கை பாப கிரகம் [ தீய கோள்]
- சூரியன்
- செவ்வாய்
- சனி
- தேய்பிறை சந்திரன்
- பாவ நிலை புதன்
மேற்கூறிய கிரகங்கள் தீய பலன்களை செய்ய கடமை பட்டவர்கள். சில நிலைகளில் மட்டும் தீய பலன்களை செய்ய இயலாமல் போகும்.
இயற்கை சுப பாபர்
- வளர்பிறை சஷ்டி திதி முதல் தேய்பிறை சஷ்டி திதி வரை சந்திரன் சுபர்
- தேய்பிறை சப்தமி திதி முதல் வளர்பிறை பஞ்சமி திதி வரை சந்திரன் பாபர்
லக்ன / ஆதிபத்திய சுபர்
- லக்னத்திற்க்கு 1, 5, 9 ஆமிட அதிபதிகள் நற்பலன் தரும் சுபர்.
- லக்னத்திற்க்கு 4, 7, 10 ஆமிட அதிபதிகள் இயற்கை பாப கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, தேய்பிறை சந்திரன். பாவ நிலை புதன், ஆகியவைகள் வந்தால் மட்டுமே இந்த இடங்களில் நற்பலன் தரும் சுபராவார்கள்
லக்ன / ஆதிபத்திய பாப கிரகம் [ தீய கோள்]
- லக்னத்திற்க்கு 3, 6, 11 ஆமிட அதிபதிகள் தீய பலன் தரும் அசுபர்
- லக்னத்திற்க்கு 4, 7, 10 ஆமிட அதிபதிகள் இயற்கை சுப கிரகங்களான குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், சுப நிலை புதன், ஆகியவைகள் வந்தால் மட்டுமே தீய பலன் தரும் அசுபராவார்கள்
சமம் என்ற சம பலம் பெரும் கிரகங்கள்
சம பலம் என்பது நன்மை தீமை இரண்டையும் கலந்து தரும் கிரக அமைப்பு
- சந்திரன் லக்னத்திற்க்கு அதிபதியாக வந்தால் சம பலம் பெருவார்
- சூரியன் மற்றும் சந்திரன் லக்னத்திற்க்கு 2, 8, 12 ஆம் வீட்டு அதிபதிகளாக வந்தால் சம பலம் பெறுவார் .
ஒவ்வொரு லக்னத்திற்க்கு ஒரு கிரகம் எப்படி பட்ட தன்மையை அடையும் என்பதை கீழே உள்ள அட்டவணை விளக்கும். இந்த லக்ன ஆதிபத்திய அடிப்படையில் மட்டுமே ஒரு ஜாதகத்தில் கிரகத்தின் சுப பாப பலன்களை நிர்ணயம் செய்ய இயலும். இயற்கை சுபர் இயற்கை பாபர் என்ற விதத்தில் ஒரு கிரகத்தின் அடிப்படை தன்மைகள் இருப்பினும் ஒரு ஜாதகருடைய லக்னத்திற்க்கு மற்றும் ஒரு ஜாதகருக்கு அவர் எப்படி பட்டவர் ? நன்மை தருபவரா அல்லது தீமை செய்பவரா என முடிவெடுக்க கீழ்க்கண்ட அட்டவணை உதவும்.
லக்னம் | சுபர் | பாபர் | சமம் |
மேஷம் | குரு | புதன் | ---- |
ரிஷபம் | சனி | குரு | சுக்கிரன் |
மிதுனம் | சுக்கிரன் | செவ்வாய் | சந்திரன் |
கடகம் | செவ்வாய் | சுக்கிரன் | சூரியன் |
சிம்மம் | செவ்வாய் | சுக்கிரன் | சந்திரன் |
கன்னி | சுக்கிரன் | செவ்வாய் | புதன் |
துலாம் | சுக்கிரன் | சந்திரன் | செவ்வாய் |
விருச்சிகம் | சந்திரன் | சுக்கிரன் | சனி |
தனுசு | சூரியன் | சுக்கிரன் | சந்திரன் |
மகரம் | சுக்கிரன் | செவ்வாய் | சூரியன் |
கும்பம் | சூரியன் | சந்திரன் | புதன் |
மீனம் | செவ்வாய் | சூரியன் | குரு |